[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

திருப்பரங்குன்றம் தொகுதி குறித்த முக்கிய தகவல்கள்

thiruparankundram-field-status

திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இடைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி வரை 17 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.

கள நிலவரம்..

தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளராக ஏ.கே. போஸ் களம் காண்கிறார். திமுக சார்பில் டாக்டர்.சரவணன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் தனபாண்டியனும், பாரதிய ஜனதா சார்பில் இரா. ஸ்ரீனிவாசனும் களத்தில் போட்டியிடுகின்றனர்.

இத்தொகுதியில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 483 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 582 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 22 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 87 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இதுவரையில், அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தேமுதிக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எம்.சீனிவேல், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்காத நிலையில், உடல் நல குறைவால் காலமானதை தொடர்ந்து தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close