[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு... வெறிச்சோடிய காய்கறி சந்தைகள்

500-and-1000-rupees-banned-business-freezing-vegetable-markets

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததால், தமிழகத்தின் முக்கிய காய்கறி சந்தைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

சில்லரை வர்த்தகத்தில் ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கமே அதிகமிருக்கும் நிலையில், மத்திய அரசின் திடீர் உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில், 3 டன் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் காய்கறி சந்தையில் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்த வந்த பொருட்களும், அங்கு எடுத்து செல்ல வேண்டிய காய்கறிகளும் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. உரிய அவகாசம் கொடுக்காமல் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுவணிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். மதுரை, ஒட்டன்சத்திரம் என முக்கிய சந்தைகளில் இன்று விற்பனை முடங்கியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close