[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை... ஸ்டாலின் குற்றச்சாட்டு

stalin-accused-on-tamilnadu-political-parties

காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு காவிரியில் சரிவர நீர் திறக்காததால் தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக விவசாயிகள், அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். திமுக சார்பிலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்திற்கு மதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், காவிரி நதிநீர் விவகாரத்தில் திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சில கட்சிகள் பங்கேற்காததை சுட்டிக்காட்டி, தமிழக கட்சிகளிடம் ஒற்றுமையில்லை என்று கூறினார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடியாத நிலையில் இருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close