[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

கைகளால் அள்ளப்படும் சாக்கடைக் கழிவுகள்..... கலங்கும் துப்புரவுத் தொழிலாளிகள்

drainage-is-cleaned-by-hand

கடலூர் நகராட்சியில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஊழியர்கள் சாக்கடைக் கழிவுகளை அள்ளி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கை கால்களில் பாதுகாப்பு உறைகள் இல்லை. குறைந்தபட்சம் கால்களில் செருப்புகளாவது அணிந்திருக்க வேண்டும். ஆனால் அதுவுமின்றி வெற்று உடலுடன் கழிவுநீர்க் கால்வாயில் இறங்கி துப்புரவுப் பணியை மேற்கொண்டிருக்கும் இவர்கள் கடலூர் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள். கழிவு நீர்க் கால்வாய்களின் அடைப்பை நீக்க நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்த வேண்டும் என 2013-ல் மத்திய அரசு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், அந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்பதற்கு இந்தக் செய்தியே சாட்சி. சாக்கடைக் கழிவுகளை அகற்றும் தங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை என்பது துப்புரவுப் பணியாளர்கள் ஆதங்கம்.

துப்புரவு பணியை மேற்கொள்வதற்குத் தேவையான கருவிகள் வழங்கப்படவில்லை என்றும் ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால், வெறும் கைகளாலேயே கழிவு நீர்க்கால்வாயில் கலந்திருக்கும் மனிதக் கழிவு, வீட்டுக்கழிவு உள்ளிட்டவைகளை அவர்கள் சுத்தம் செய்கின்றனர். இருந்தபோதிலும், நோய்த்தடுப்பு மாத்திரைகள்கூட வழங்கப்படுவதில்லை என்கின்றனர் துப்புரவுப் பணியாளர்கள். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், கழிவு நீர்க்கால்வாயில் ஊழியர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்துவது என்பது அப்பட்டமான விதிமீறல் என்கிறது அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு.

துப்புரவு பணியாளர்களுக்கு நேர்ந்த இன்னல்கள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷை தொடர்பு கொண்டபோது, விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தவறிழைத்தது யார் என்பது கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையடுத்து, புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, கடலூர் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து கடலூர் நகராட்சி ஆணையர் விஜயகுமாரிடம் தொலைபேசிய வாயிலாக கேட்டபோது, அனைவருக்கும் அனைத்து விதமான பாதுகாப்பு உபகரணங்களுடம் வழங்கப்பட்டு விட்டதாகக் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close