[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

tn-leaders-extend-diwali-greetings

அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

தீபாவளி திருநாளை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழவேண்டும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்தியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தனது வாழ்த்துச் ‌செய்தியில், தமிழக மக்களின் வாழ்வில் இருள் அகன்று ஒளி பிறக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் தீராத பிரச்னைகள் தீர்ந்து செழித்து வாழ வாழ்த்துவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தனது வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்களின் வாழ்வு மலர்ந்து மகிழ்ச்சி வெள்ளம் பெருக தனது உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தீபாவளியைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகைதீன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close