[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது

cauvery-water-today-reach-tamilnadu

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 15 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காவிரி நீர் மேட்டூர் அணையை இன்று இரவு வந்தடையும் என எதிர்பார்க்கப்டுகிறது. 

முன்னதாக, செவ்வாய்கிழமை இரவு 12 மணியளவில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது.

அணைகளில் நீர் திறக்கப்பட்டதை எதிர்த்து கிருஷ்ணராஜசாகர் அணை அருகே போராட்டம் நீடிக்கிறது. தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் இரு அணைகளிலும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close