[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா?

india-vs-south-africa-rohit-sharma-likely-to-open-easwaran-could-replace-kl-rahul

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. 

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதலாவது டி-20 போட்டி தர்மசாலாவில் வரும் 15 ஆம் தேதியும், 2-வது போட்டி மொகாலியில் 18 ஆம் தேதியும், 3-வது போட்டி பெங்களூருவில் 22 ஆம் தேதியும் நடக்கிறது. டி-20 போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2 ஆம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 10 ஆம் தேதியும், 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19- ஆம் தேதியும் நடக்கிறது.

முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு, டெல்லியில் இன்று கூடி அணியை தேர்வு செய்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் சரியாக ஆடாததால் அவருக்குப் பதிலாக, ரோகித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கவேண்டும் என்று கங்குலி உட்பட சில மூத்த வீரர்கள் கூறியிருந்தனர். 

ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ஆடி வரும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார். கடைசியாக, கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அவர் உட்கார வைக்கப்பட்டார்.
அதனால், இந்த தொடருக்கு அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கே.எல்.ராகுல் நீக்கப்பட்டால் மாற்று வீரர்களாக அபிமன்யூ ஈஸ்வரன், பியாங்க் பன்சால், சுப்மான் கில் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மிடில் ஆர்டரில் புஜாரா, விராத் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி இடம் பெறுவார்கள். ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பலாம். விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட், விருத்திமான் சாஹா இடம் பிடிப்பார்கள்.

வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷமி ஆகியோர் இடம் பெறுவார்கள். மாற்று வேகப்பந்து வீச்சாளராக நவ்தீப் சைனிக்கு இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close