[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

இலங்கைக்கு எதிரான முதல் டி-20: கிராண்ட்ஹோம், டெய்லர் மிரட்டலில் வென்றது நியூசி!

taylor-de-grandhomme-fireworks-trump-vintage-malinga

இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் இப்போது நடந்து வருகிறது. முதலாவது டி-20 போட்டி பல்லேகலே-வில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. குஷால் மெண்டிஸ் சிறப்பாக ஆடி, 53 பந்தில் 79 ரன்கள் சேர்த்தார். டிக்வெல்லா 33 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 3 பந்து மீதமுள்ள நிலையில் 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணி யின் கிராண்ட்ஹோம் 28 பந்துகளிலும் 44 ரன்களும் ராஸ் டெய்லர் 29 பந்துகளில் 48 ரன்கள் விளாசினர். இலங்கை தரப்பில் மலிங்கா, டி சில்வா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close