[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

’நான் ஓய்வு பெறுவதா அறிவிக்கலையே..?’: கிறிஸ் கெய்ல்

chris-gayle-responds-to-retirement-rumours-after-3rd-odi

’சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விரர் கிறிஸ் கெய்ல்.

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையே நேற்று நடந்த கடைசி மற்றும் மூன்றா வது ஒரு நாள் போட்டியில், கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடினார். அவர் 41 பந்தில் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்ததும் ஓய்வு பெற்றுவிட்டதாக நினைத்து, இந்திய வீரர்கள் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். இதனால் அவர் நேற்றைய போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார் எனக் கூறப்பட்டது. 

ஏற்கனவே உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்கு வழியனுப்பும் போட்டி ஒன்று நடத்தப்படும் என்றும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர், அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கிறிஸ் கெய்ல், நேற்றைய போட்டிக்குப் பின் கூறும்போது, ‘’நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை. இப்போதும் வெஸ்ட் இண்டீஸ் அணியில்தான் தொடர்கிறேன். அடுத்த அறிவிப்பு வரும்வரை அணியில் தொடர்வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close