[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்

இன்று 2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணியின் சாதனை தொடருமா?

ind-vs-wi-2nd-odi-shreyas-iyer-s-day-of-reckoning-as-india-pray-for-full-game

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. கயானாவில் நடந்த முதலாவது போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

2006-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்ததில்லை. அந்த சாதனையை தக்க வைக்கும் முயற்சியில் இந்திய அணி இன்று களமிறங்கும். தொடக்க ஆட்டக்காரர், தவான் டி20 தொடரில் சரியாக ஆடவில்லை. இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்று வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவர் நான்காவது வரிசையில் இறங்கலாம். விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தன்னை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார்.

அதே நேரம், டி-20 தொடரில் சந்தித்த தோல்விக்கு இதில் பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி முயற்சிக்கும். இன்றைய போட்டி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லுக்கு 300-வது போட்டி. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில், அதிக ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள லாராவை அவர் முந்துகிறார்.

இரு அணிகளும் இதுவரை 128 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன.  இந்திய அணி 60 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 62 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி சமனில் முடிந்துள்ளது. 4 போட்டிகளில் முடிவில்லை.

இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close