[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

பயிற்சியாளரை பரிந்துரைக்க கோலிக்கு உரிமை உள்ளது - சவுரவ் கங்குலி

virat-kohli-has-right-to-say-who-he-wants-as-coach-sourav-ganguly

தலைமைப் பயிற்சியாளரை பரிந்துரை செய்ய கேப்டன் விராட் கோலிக்கு உரிமை உள்ளது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் காலக்கெடு முடிவடைந்தது. குழுவில் கபில்தேவ், அன்ஷுமன் கெயிவாட் (Anshuman Gaekwad), சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய குழு ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி நேர்காணல் நடத்தவுள்ளது. 

தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, நியூசிலாந்தின் மைக் ஹெசன், இலங்கையின் ஜெயவர்த்தனே உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங், முன்னாள் மேனேஜரும், ஜிம்பாப்வே அணியின் தற்போதைய பயிற்சியாளருமான லால்சந்த் ராஜ்புட் ஆகியோரும் விணப்பித்துள்ளனர். இருப்பினும், தலைமைப் பொறுப்பாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியே தொடர்வதற்கு கேப்டன் விராட் கோலி ஆதரவு தெரிவித்து இருந்தார்.

                         

இந்நிலையில், தலைமைப் பயிற்சியாளரை பரிந்துரை செய்ய விராட் கோலிக்கு உரிமை உள்ளது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். “அவர்தான் கேப்டன். அதனால், தலைமைப் பயிற்சியாளராக யார் வரலாம் என்ற தனது விருப்பத்தை அவர் தெரிவிக்கலாம்” என்று கங்குலி கூறியுள்ளார். 

முன்னதாக, 2017 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரியை தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்த குழுவில் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லஷ்மண் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close