[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

“ஓய்வை பற்றி யோசிக்காதீர்கள் தோனி” - பாடகி லதா மங்கேஷ்கர் கோரிக்கை 

lata-mangeshkar-asks-ms-to-not-retire-with-moving-post

தோனியின் ஆட்டம் இந்திய அணிக்கு தேவைப்படுவதால் தற்போது அவர் ஓய்வு முடிவை அறிவிக்ககூடாது என்று பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அத்துடன் உலகக் கோப்பை தொடரிலிருந்து முற்றிலும் வெளியேறியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் தோனி அவுட் ஆன பிறகு சமூக வலைத்தளங்களில் '#ThankYouMSD' , '#ThankYouDhoni' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதில் ரசிகர்கள் தோனியை பாராட்டி வந்தனர். அத்துடன் சிலர் அவரின் ஓய்வு குறித்தும் பதிவிட்டு வந்தனர். 

இந்நிலையில் தோனி தனது ஓய்வு முடிவை தற்போது அறிவிக்க கூடாது என்று பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தோனிஜி, நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்க போகிறீர்கள் என்று தகவல் வருவதை நான் சில நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அது குறித்து யோசித்து கொண்டிருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். 

ஏனென்றால் இந்திய அணிக்கு உங்களுடைய ஆட்டம் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் தற்போது ஓய்வு குறித்து யோசிக்க வேண்டாம் என்பது என்னுடைய கோரிக்கை” எனத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு தான் பாடிய பாடல் ஒன்றை அர்ப்பணித்து, “நேற்றைய போட்டியில் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் நாம் தோற்கவில்லை. உங்களுக்கு இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close