[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தந்தை இறப்பிலும் தாய்நாட்டுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை 

indian-women-s-hockey-team-beat-japan-3-1-to-clinch-fih-series-finals

பெண்கள் உலக ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

பெண்கள் உலக ஆக்கி தொடர் ஜப்பானில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய பெண்கள் ஹாக்கி அணி தொடரை வென்றுள்ளது. முதல் லீக் போட்டியில் உருகுவேவை (4-1), போலாந்தை (5-0), பிஜி அணியை 11-0 என இந்திய பெண்கள் அணி வீழ்த்தியது. அரையிறுதிப் போட்டியில் சிலி அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

         

இந்நிலையில், பெண்கள் உலக ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி ஹிரோஷிமா நகரில் இன்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக கேப்டன் ரானி ரம்பால் மூன்றாவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். அவரை தொடர்ந்து ஜப்பான் வீராங்கனை கனோன் மோரி 11வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார். பின்னர், 45வது மற்றும் 60ஆவது நிமிடங்களில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் அசத்தலாக இரண்டு கோல் அடித்தார். இறுதியில், இந்திய பெண்கள் அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது. இந்தத் தொடரில் முதல் இரண்டு இடங்களுக்கு வந்தவுடனேயே 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறிவிட்டது. 

         

இந்நிலையில், இந்திய பெண்கள் அணி உலக ஹாக்கி தொடரில் வெற்றி பெற்றதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரெஜிஜு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்திய அணி மிகவும் அற்புதமாக விளையாடியதாக அதில் பாராட்டி இருந்தார். அத்துடன் நேற்று பதிவிட்ட முக்கியமான பதிவினை மீண்டும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய தந்தை இறந்த போதும் இந்திய வீராங்கனை லால்ரெம்சியா அரையிறுதிப் போட்டியில் விளையாடியதை அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ட்விட்டரில், “இந்திய அணி ஹிரோஷிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த அரையிறுதிப் போட்டி விளையாட சென்ற தருணத்தில் இந்திய ஹாக்கி வீராங்கனை லால்ரெம்சியாமியின் தந்தை உயிரிழந்தார். அப்போது, ‘என்னுடைய தந்தையை நான் பெருமைபட வைக்க நினைக்கிறேன். நான் இங்கேயே இருந்து விளையாட விரும்புகிறேன். நிச்சயம் இந்தியா தகுதி பெறும்’ என்று பயிற்சியாளரிடம் அவர் கூறியுள்ளார்” என கிரென் ரெஜிஜு தெரிவித்துள்ளார்.

      

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த லால்ரெம்சியாமி லீக் போட்டிகளில் அடிக்கப்பட்ட 20 கோல்களில் அவர் இரண்டினை அடித்தார். அவருக்கு வயது 19.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close