[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு

india-vs-pakistan-match-22-rain-stops-play-in-manchester-as-india-cross-300

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா - ஷிகார் தவான் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது. 

பின்னர், ரோகித் சர்மா உடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 85 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் இரண்டாவது சதம் இது. 

         

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்துவீச்சில் வாஹப் ரியாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மொத்தம் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகள் விளாசினார். ரோகித் ஆட்டமிழந்ததை அடுத்து விராட் கோலியுடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 51 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிரடியாக விளையாட தொடங்கிய பாண்ட்யா ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அமீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 56 ரன்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் 222 இன்னிங்ஸில் இந்த ரன்களை எட்டியுள்ளார். இதற்கு முன்பு 276 இன்னிங்ஸில் சச்சின் 11 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தார்.

   

தோனி ஒரு ரன்னில் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விஜய் சங்கர் களமிறங்கினார். இந்திய அணி 46.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விராட் கோலி 71(62), விஜய் சங்கர் 3(6) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close