[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? கேரள ஜோதிடர் அதிரடி கணிப்பு

india-will-win-world-cup-says-kerala-numerologist

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது என்று கேரள எண்கணித ஜோதிடர் அதிரடியாக கணித்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.கே.தாமோதரன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர், இப்போது எண் கணித ஜோதிடம் பார்த்து வருகிறார். அரசியல், விளையாட்டு உள்பட பல்வேறு நிலவரங்கள் குறித்து இவர் கணித்தது இதற்கு முன் சரியாக நடந்திருக்கிறது.

2011 ஆம் ஆண்டு, உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று இவர் கணித்துச் சொன்னார். அப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அதே போல இப்போதும் இந்திய அணியே உலகக் கோப்பையை வெல்லும் என்று அடித்துச் சொல் கிறார்.

இதுபற்றி தாமோதரன் கூறும்போது, ‘’ 2011 ஆம் ஆண்டு, 2, 6. 7 ஆகிய எண்கள்தான் அதிக்கம் செலுத்தின. தோனியின் விதி எண் 33. அதாவது 6. அதனால் அவர் தலைமையி லான அணி வெற்றி பெற்றது. இப்போதைய கேப்டன் விராத் கோலியின் பிறந்த எண் 5. அமானுஷ்ய எண் 5. சுவா ரஸ்யம் என்னவென்றால், தோனியின் எண்களுக்கும் விராத் கோலியின் எண்களுக்கும் அதிக மாற்றமில்லை. விராத் கோலியின் விதி எண் ணும் 33-தான். அதனால் இருவருக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக இருக்கிறது. 

கோலியின் பிறந்த தேதி 5.11.1988. ராசி விருச்சிகம். இது 9 ஆம் எண்ணுடன் தொடர்புடையது. இதனால் அவருக்கு 3, 6 மற்றும் 9 ஆம் எண் ராசியானது. விதி எண் 33. அவரது வயது அதிர்ஷ்டமான 30 (3-0=3). இது 12 வது உலகக் கோப்பை. அதாவது நியூமராலஜிபடி 1+2=3. இந்த காரணிகளை வைத்து பார்க்கும்போது, தோனியும் விராத் கோலியும் இணைந்து இந்த உலகக் கோப்பை வெல்ல அதிகம் வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close