[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

உலகக் கோப்பையில் இருந்து ஷிகர் தவான் விலகல்!

shikhar-dhawan-removed-from-indian-squad-due-to-injury

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் அபார சதமடித்தார். இந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலில் பலமாக தாக்கியது. அப்போதே களத்துக்குள் பிசியோதெரபிஸ்ட், அவருக்கு சிகிச்சை அளித்தார். இருந்தாலும் வலியுடன் விளையாடிய தவான், 109 பந்தில் 117 ரன் குவித்தார். அந்த விரல் கடுமையாக வீங்கியதை அடுத்து, அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. ஜடேஜா அவருக்குப் பதில் பீல்டிங் செய்தார்.

இந்நிலையில் அவர் கைவிரலில் இன்று ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்திய அணி, நியூசிலாந்து அணியை, வரும் 13 ஆம் தேதி எதிர்கொள் கிறது. அதற்குள் அவர் காயம் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காயம் குணமாகவில்லை என்பதால் மூன்று வாரங்க ளுக்கு ஓய்வெடுக்கும்படி, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.  அவருக்குப் பதிலாக ரிஷாப் பன் ட், ஸ்ரேயாஸ் ஐயர், அம்பத்தி ராயுடு ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close