[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

என் இயல்பான ஆட்டத்தை ஆட முடியவில்லை: ரோகித் சர்மா

i-couldn-t-play-my-natural-game-rohit-sharma

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தாலும் இயல்பான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று இந்திய வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை தொடரில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மோரிஸ் 42, டு பிளிசிஸ் 38, பெலுக்வயோ 34, ரபாடா 31, மில்லர் 31 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, புவனேஸ்வர் குமார் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து, 228 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 122 (144) ரன் அடித்தார். இது அவருக்கு 23 வது சதம். உலகக் கோப்பையில் இரண்டாவது சதம். 

சதம் அடித்தது பற்றி ரோகித் சர்மா கூறும்போது, ’’பந்துவீச்சாளர்களுக்கு இந்த பிட்சில் ஏதோ இருந்தது. அதனால் எனது இயல்யான, வழக்கமான ஆட்டத்தை ஆட முடியவில்லை. நேரம் எடுத்துக்கொண்டு மெதுவாகவே ஆடினேன். சரியான பந்துகளை மட்டுமே அடித்தேன். நான் விளையாட விரும்பிய சில ஷாட்களை விளையாடாமல் தவிர்த்தேன். குறைவான ஸ்கோர் என்றாலும் ஆரம்பத்தில் மெதுவாக ஆட நினைத்தேன். பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்த முடிவு செய்தேன். அனைத்து வீரர்களும் தங்கள் வேலையை சரியாக செய்தனர்.

ஒன்றிரண்டு வீரர்களை சார்ந்து மட்டும் அணி இருக்க முடியாது. இந்திய அணியில் அனைவரும் சிறப்பான வீரர்கள்தான். கடந்த 2 வருடமாக வலுவான அணியாக இருக்கிறது. அதுதான் அணியின் அடையாளம். அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. சில நேரங்களில் யாராவது ஒரு வீரர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சவாலை சிறப்பாக முடிப்பார்கள்.  இது ஒரு பெரிய போட்டி. நாங்கள் சிறப்பாக அடியிருக்கிறோம். இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலை சிறப்பாக இருக்கிறது. அதிகமாக வியர்க்கவில்லை’’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close