[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

தோனி, விராத் கோலி அச்சுறுத்துவார்கள்: டும்னி கணிப்பு

virat-kohli-ms-dhoni-pose-a-big-threat-says-jp-duminy

இந்திய அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டும்னி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பங்கேற்ற இரண்டு போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி, தோல்வியை தழுவியுள்ளது. அடுத்து இந்திய அணியை, தென்னாப்பிரிக்க அணி நாளை மறுநாள் (5 ஆம் தேதி) சந்திக்கிறது. 

இந்நிலையில் இந்திய அணியை எதிர்கொள்வது பற்றி, டுமினியிடம் கேட்டபோது, ’’இந்திய அணியில் அதிகமான மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சு, சுழல் பந்துவீச்சு என அந்த அணி சிறப்பாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் பும்ராவின் ஃபார்ம் அற்புதமாக இருந்தது. அதை இங்கும் எதிர்பார்க்கலாம். உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களான விராத் கோலி, அனுபவ வீரர் எம்.எஸ்.தோனி ஆகியோர் அச்சுறுத்தலாக இருப்பார்கள். இதைத் தாண்டி, அந்த நாளில் எப்படி ஆடுகிறோம் என்பதை பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்’’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close