[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

தடுமாறும் சென்னை அணி : தோனி ரன் அவுட்டால் மனமுடைந்த ரசிகர்கள்

chennai-chasing-the-target-unfortunately-dhoni-was-run-out

சென்னை அணி 73 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி, களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரரான டி காக் ஆரம்பம் முதலே சிக்ஸர் மழை பொழிந்தார். மற்றொரு
புறம் ரோகித் ஷர்மா பொறுப்புடன் ஆடினார். டி காக் 29 (17) ரன்கள் எடுத்திருந்த போது தகூர் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

அதைத்தொடர்ந்து சாஹர் வீசிய பந்தில் ரோகித் ஷர்மா 15 (14) ரன்களில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து, சூர்யகுமார் 15 (17),
இஷான் கிஷண் 23 (26), ஹர்திக் பாண்ட்யா 16 (10) ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதிவரை ஆடிய பொலார்ட் 41 (25)
ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 149 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் பொலார்ட் 41 (25) ரன்கள்
எடுத்தார். சென்னை அணியில் சாஹர் 3 விக்கெட்டுகளும், தகூர் மற்றும் தஹிர் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர். 

இந்நிலையில் இரண்டாவது பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணியில் டு பிளசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 (13)
ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ரெய்னா 8 (14) ரன்களில் வெளியேறினார். அவர் ஒரு ரிவிவ் ஆப்ஷனையும்
வீணாக்கிவிட்டுச் சென்றார். பின்னர் வந்த அம்பத்தி ராயுடு 1 (4) மட்டும் எடுத்து சொதப்பிவிட்டுச் சென்றார். இந்த இக்கட்டான
தருணத்தில் தோனி 2 (8) ரன்களில் ரன் அவுட் ஆகியுள்ளார். மறுமுனையில் ஷேன் வாட்சன் 42 (42) ரன்களுடன் களத்தில் உள்ளார்.
சென்னை அணி 14 ஓவர்களில் 85 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தோனி ரன் அவுட்டால் சென்னை ரசிகர்கள்
வருத்தமடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close