[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

ஐபிஎல் ஃபைனல்: ’விசில்போடு’ ஆர்மியில் என்ன மாற்றம்?

ipl-final-what-changes-will-be-made-in-whistle-podu-army

இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது ஐபிஎல் திருவிழா. இன்று நடக்கும் ஃபைனல் கோதாவில் மும்பை இண்டியன்ஸும் சென்னை சூப்பர் கிங்ஸும் மோத இருக்கின்றன. இரண்டு அணிகளுமே பலம் கொண்டது என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.  இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில், வெல்லும் அணிக்கு 28 கோடி ரூபாய் காத்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், 2010, 2011, 2018 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. மும்பை 2013, 2015, 2017 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருக்கிறது. இரண்டு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றிருப்பதால், நான்காவது முறையாக கோப்பையை யார் கைப்பற்றுவார்கள் என்கிற பரபரப்பு, பற்றிக்கொண்டிருக்கிறது!

2 ஆண்டு தடை கண்ட சென்னை அணி, பத்தாவது முறையாக இந்த போட்டியில் களம் கண்டு  8 வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து, சாதித்திருக்கிறது. மும்பைக்கு இது ஐந்தாவது முறை. 

இந்த ஐபிஎல் தொடரில், மும்பைக்கு எதிராக ஆடிய மூன்று போட்டிகளிலுமே சென்னை தோற்றிருக்கிறது. அதற்கு பழிவாங்கும் விதமாக, ஃபைனல் இருக்கலாம். சென்னை அணியில் கேப்டன் தோனி மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.  கடந்த போட்டியில் வாட்சன், டுபிளிசிஸ் ஆகியோர் அரை சதம் விளாசியது, சென்னை அணிக்கு நம்பிக்கையை அளித்திருக்கும். இன்றைய போட்டியிலும் அவர்கள் அதிரடி விளாசலை அரங்கேற்ற வேண்டும். சுரேஷ் ரெய்னா, ராயுடு ஆகியோரும் கொஞ்சம் பங்களிப்பு செய்தால், விசில்போடு ஆர்மி மிரட்டும். பந்துவீச்சாளர்கள் தீபக் சாஹர், தாஹிர், ஹர்பஜன், ஜடேஜா ஆகியோரும் சிறப்பாகவே செயல்படுகின்றனர். மும்பை அணியில், குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கூடவே இருக்கிறார் பொல்லார்ட். ஹர்திக் பாண்ட்யா ஆல் ரவுண்டராக ஜொலிக்கிறார். பந்துவீச்சில் பும்ரா, மலிங்கா, குணால் பாண்ட்யா, ராகுல் சாஹர் எதிரணிக்கு சவால் கொடுக்கிறார்கள். இந்த தொடரில் பும்ரா, ஹர்திக், சாஹர் பந்துகளில் சென்னை கேப்டன் தோனி சொல்லிக்கொள்ளும்படி ரன்கள் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 

இன்று நடக்கும் போட்டியில் சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. கடந்த போட்டியில் ரன்களை வாரிய வழங்கிய ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாகக் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் சேர்க்கப்படுவார். அந்த வாய்ப்பு, முரளி விஜய்க்கு கிடைக்கலாம்.

அணி வீரர்கள் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி (கேப்டன்), டுபிளிசிஸ், வாட்சன், ரெய்னா, ராயுடு, பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், தாஹிர், ‌முரளி விஜய்.

மும்பை இண்டியன்ஸ்: 
ரோகித் சர்மா (கேப்டன்), டி காக், சூர்யகுமார், இஷான் கி‌ஷன், குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ராகுல் சாஹர், மலிங்கா, பும்ரா, பென் கட்டிங்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close