[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

தோனியை ரசிகர்களுடன் இணைத்த ‘தல’ பந்தம்  - உணர்ச்சியில் மிதந்த சேப்பாக்கம்

ms-dhoni-pays-tribute-to-csk-fans-thala-is-a-big-nickname-they-have-given-me

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று போட்டி முடிந்த பின்னர் தன்னுடைய ரசிகர்களுடன் உணர்வுபூர்வமாக நேரத்தை செலவிட்டார் தோனி.

சென்னை அணி ரசிகர்களால் நேற்றைய போட்டியை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. போட்டி தொடங்கும் வரை தோனி விளையாடுவாரா? என்பதே சந்தேகமாகதான் இருந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால், அவர் ஓய்வு எடுத்துக் கொள்ளவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், தோனி போட்டியில் இருக்கிறார் என்றதுமே மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி மழையில் நனைந்தனர். டாஸ் போட தோனி மைதானத்திற்குள் வந்ததும் அவ்வளவு உற்சாக கரவொலி. 

                                     

தோனியின் மீது ஏன் இவ்வளவு பாசம் ரசிகர்களுக்கு?. தோனியை விட மிகச்சிறந்த தொழில்நுட்ப ரீதியான வீரர்கள் பலரும் இருக்கிறார்கள். பேட்டிங்கில் தோனியை விட சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. அப்படியெனில் தோனியை எல்லோரும் விரும்ப காரணம்தான் என்ன? நேற்றைய போட்டியை கொண்டே அதனை நாம் புரிந்து கொள்ளலாம். நேற்றைய போட்டியில் 22 பந்துகளில் 44 ரன்கள் தோனி அடித்தார். அதேபோல், விக்கெட் கீப்பிங்கில் அற்புதமான இரண்டு ஸ்டம்பிங் செய்தார். இவை இரண்டு அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது.

                                            

ஆனால், அதனையெல்லாம் தாண்டி போட்டி முடிந்த பிறகு தோனி மைதானத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதுதான் முக்கியம். அதில் முதலானது ஹர்ஷா போக்லே உடனான தோனியின் உரையாடல். ரசிகர்களின் மனநிலையை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் என்பதை அவருடைய நேற்றைய பேச்சு காட்டியது. தன்னை எல்லோரும் ‘தல’ என்று அழைப்பதை குறிப்பிட்டு அதனை ஸ்பெஷலான விஷயமாக அவர் கூறியது ரசிகர்களை சிலிர்க்க வைத்துவிட்டது. ‘தல’ என்று தோனி நேற்று பேசியதுதான் ட்விட்டரில் ஒரே டிரெண்டிங். தோனி பேசிய இந்த வீடியோவையும் பலர் ட்விட்டரில் பகிர்ந்தனர்.

                                               

அத்துடன், போட்டி முடிந்த உடன் மைதானத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் நேரம் செலவிட்டு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ஊழியர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் தோனியை வட்டமிட்டு வந்தார்கள். மைதான ஊழியர்களுடன் தோனி எடுத்துக் கொண்ட படமும் வைரலானது. 

                                 

அதன்பிறகு, ரசிகர்களுக்காக மற்றொன்றையும் தோனி செய்தார். கையில் டென்னிஸ் பேட்டை, ஒரு பாக்ஸ் நிறையை டென்னிஸ் பந்தை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் படை சூழல் மைதானத்தை சுற்றி வந்தார் தோனி. தோனி மைதானத்தில் இருந்து கொண்டு டென்னிஸ் பேட்டால் ஒவ்வொரு பந்தாக ரசிகர்களை நோக்கி அடித்தார். அதாவது ரசிகர்களுக்கு பந்தை அன்பு பரிசாக அளித்தார்.

                                         

தோனி கையால் தரும் பந்து என்றால் சும்மாவா என்ன? ரசிகர்கள் நீ, நான் எனப் போட்டி போட்டுக் கொண்டு பந்தை பிடித்தனர். இந்த நிகழ்ச்சி மைதானத்தில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அரங்கமே எழுந்து நின்று, கைதட்டலுடன் ஆரவாரம் செய்தது. சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

                                        

போட்டி முடிந்த பிறகான அந்த ஒரு மணி நேரத்தை ரசிகர்களால் மறந்துவிட முடியாது. இது இந்தப் போட்டியில் மட்டுமல்ல. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் மைதானத்தில், தோனியின் சேட்டை அதிகமாகவே இருக்கும். தோனி தன்னுடைய மகளுடன் மட்டுமல்ல வாட்சன், ரெய்னாவின் குழந்தைகளுடன் ஓடிப் பிடித்து விளையாடுவார். சில நேரங்களில் ரசிகர்களுடன் மல்லுக்கட்டுவார். 

                            

மேலும், நேற்றையப் போட்டி முடிந்த பின்னர் முக்கியமாக இரண்டு படங்கள் வைரலானது. அதில் ஒன்று, தோனியும், கங்குலியும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் அந்தப் புகைப்படம். அப்படம் அவ்வளவு உணர்வுபூர்வமாக இருந்தது. ஏனெனில் தோனியை அணிக்குள் கொண்டு வந்தவர் கங்குலி. அதனால், அவருடைய நம்பிக்கையை தோனி காப்பாற்றியதை ரசிகர்கள் குறிப்பிட்டு மகிழ்ந்தனர்.

                     

மற்றொரு படம், தோனி பேட்டிங் செய்ய வந்த உடன், ரிஷப் பண்ட் பின்னால் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, தோனியை பார்த்து ரிஷப் அழகாக புன்னகைத்தார். அந்தப் படமும் நேற்று வைரலானது. 

                     

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close