[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

மீண்டும் அணிக்கு திரும்பிய தோனி- சென்னை பேட்டிங் 

ipl-2019-dc-won-the-toss-elects-to-bowl-against-csk

சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில், லீக் சுற்று போட்டிகள் விரைவில் முடிய இருக்கின்றன. அடுத்து பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடக்க இருக்கின்றன. லீக் சுற்றின் 50 வது போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணியில் மீண்டும் தோனி களமிறங்கியுள்ளார். அத்துடன்  சென்னை அணியில் டூ பிளசிஸ், ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல டெல்லி அணியில் டிரண்ட் போல்ட் மற்றும் சுஜித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ரபாடா மற்றும் இஷாந்த் சர்மா களமிறங்கவில்லை. 

இன்றைய போட்டியில், தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் மீண்டும் பழைய அதிரடியை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சொதப்பி வரும் ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ் ஆகியோர் நிலைத்து நின்று அதிக ரன்கள் சேர்ப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். பந்து வீச்சில் தீபக் சாஹர், தாஹிர், ஹர்பஜன் ஆகியோர் பலமாக இருந்தும் சில போட்டிகளில் விக்கெட் வீழ்த்த தவறிவிடுகின்றனர். சென்னை ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய போட்டியில், சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவதைப் பொறுத்தே சாதகமாக அமையும்.

அத்துடன் புள்ளிப் பட்டியலில் 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் சென்னை அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை பிடிக்கும். இதனால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close