[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக
  • BREAKING-NEWS விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு
  • BREAKING-NEWS அமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு யார் காரணம்? - விராட் விளக்கம்

don-t-care-if-i-m-judged-on-not-winning-the-ipl-kohli

ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதற்காகதான் நாங்களும் விளையாடுகிறோம், ஆனால் வெல்ல முடியாமல் போனதற்கு சில காரணங்கள் இருக்கிறது என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, சென்னையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, செய்தியாளர்கள், பெங்களூர் அணி கோப்பையை வெல்லாமல் உள்ளது, வீரர்களின் உடற்தகுதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களிடம் விராட் பேசுகையில், “இரு அணிகளும் சமமான பலத்துடன் இருக்கிறோம். சென்னை அணிக்கு எதிராக சென்னையில் விளையாடுவது எப்போதும் சவாலானது. அணிக்கு என்ன தேவை என்பதை சரியாக அறிந்தவர் தோனி. எங்கள் அணியில் அயல் நாட்டு வீரர்கள் முன்பை விட சற்று குறைவாக உள்ளனர். அதற்குப் பதிலாக திறமை வாய்ந்த உள்ளூர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களை நாங்கள் சரியான வகையில் பயன்படுத்துவோம். 

               

அணி என்னுடைய பேட்டிங்கை மட்டும் நம்பியில்லை. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்கள். அணியில் என்னுடைய பங்களிப்பை செலுத்துவதில் முனைப்புடன் இருக்கிறேன். மற்ற வீரர்களும் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்.

இவ்வளவு திறமையான வீரர்கள் இருந்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ஆனால், கோப்பை குறித்து நான் பெரிதும் கவலைப்படுவதில்லை. கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் தான் இருக்கும். போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தான் நாங்கள் விளையாடுகிறோம். சில தவறான முடிவுகள், நெருக்கடி நிலைகளை சமாளிப்பதில் இருக்கும் சிக்கல்களால் நாங்கள் இறுதி வரை செல்ல முடியாமல் போகிறது. 

           

உலகக் கோப்பை நெருங்குவதால் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களின் உடல்தகுதியை தக்கவைப்பது குறித்து பரவலாக பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் வீரர்கள்தான் சாதுர்யமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு போட்டியின் போதும் தன்னுடைய உடற்பயிற்சி ஆலோசகரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டும். அவர்களின் கருத்திற்கு வீரர்கள் மதிப்பளிக்க வேண்டும். 

ஒவ்வொருவரும் 120 சதவீதம் உற்சாகத்துடன் விளையாட வேண்டும். ஒருவேளை முடியவில்லை என்றால், வெளிப்படையாக விளையாடாமல் இருந்துவிட வேண்டும். விருப்பம் இல்லாமல் விளையாட வேண்டாம்” என்றார்.  

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close