[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

மோசமான நிலைமைகளில் தோனி போன்ற வீரர் தேவை - ஷேன் வார்ன்

shane-warne-terms-ms-dhoni-as-must-have-player

தோனி விளையாடுவது குறித்து விமர்சனம் செய்பவர்கள் 'தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுபவர்கள் 'என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முக்கிய கிரிக்கெட் திருவிழாவான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.  இந்தத் தொடர் இங்கிலாந்து நாட்டில் வரும் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக பல்வேறு கிரிக்கெட் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்திய கிரிக்கெட் அணியும் அதற்கு ஆயத்தமாகும் வகையில் ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. குறிப்பாக கடைசி இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைய அணியில் தோனி இல்லாததே காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தோனி குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது குறித்து விமர்சனம் செய்பவர்கள் 'தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுபவர்கள் 'என கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், ஆட்டத்தில் நி‌லைமை மோசமாக செல்லும் போது தோனி போன்ற ஒரு அனுபவ வீரர் அணி‌யில் இருப்பது அவசியம். தோனியின் அனுபவமும், ஆட்டத்தை சரியாக கணிக்கும் அவருடைய தலைமை அனுபவங்களும் உலகக் கோப்பை போட்டியின் போது இந்தியாவுக்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகக் கோப்பை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக உலக கோப்பை கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவித்திருந்த சுனில் கவாஸ்கர் , வாழ்வா சாவா என்ற நேரங்களில் தோனியின் ஆலோசனை மிகப்பெரிய பலமாக இருக்கிறது. தோனிக்கும், கோலிக்கும் இடையே நல்லதொரு புரிதல் இருக்கிறது. இந்த புரிதலுடன் இவர்கள் இருப்பது உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close