[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

அசத்தும் விஜய் சங்கர் ! உலகக் கோப்பை அணியில் கிடைக்குமா இடம் ?

vijay-shankar-ensured-his-berth-on-world-cup-squad-for-india

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதற்காக சரியான அணியை உருவாக்க கடந்த ஓராண்டாக இந்தியா முயன்று வருகிறது. உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அடியில் இடம் பிடிக்க இந்திய அணியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்திய அணிக்கு ஒன்று சரியாக அமைந்தால் மற்றொன்று சொதப்புகிறது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் சிறப்பாக விளையாடி வந்தனர். ஆனால், ஆஸி அணியுடனான நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸி தொடரில் இந்திய அணியின் பிரதான ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை. இதனால் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். 

நியூசிலாந்து தொடரில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்த விஜய் சங்கர், இம்முறை ஆஸ்திரேலியாவிடம் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். நாக்பூரில் நேற்று ஆஸிக்கு எதிராக நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றிப் பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம், விஜய்சங்கர் அற்புதமாக வீசிய கடைசி ஓவர் ஆகும். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் மற்றும் மூன்றாவது பந்தில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி விஜய்சங்கர் அசத்தினார். பும்ரா, சமிக்கு ஓவர்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இக்கட்டான நிலையில் கடைசி ஓவரை விஜய்சங்கர் வீசினார்.

வெற்றிக்கு பின்னர் பேசிய விராட் கோலி, “விஜய்சங்கருக்கு 46வது ஓவரை கொடுக்கலாம் என்றுதான் நினைத்தேன். பின்னர், ரோகித், தோனியிடம் பேசினேன். சமி, பும்ரா முதலில் பந்துவீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தட்டும். அவர்கள் ஓவரில் விக்கெட்கள் வீழ்ந்துவிட்டால் நாம் முன்னிலையில் வந்துவிடுவோம். சரியாக அதுதான் நடந்தது. விஜய்சங்கர் அற்புதமாக பந்துவீசினார். துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன் களத்தில் ஆலோசனை செய்வது ஆரோக்கியமாக இருக்கும். தோனி எப்பொழுதே எங்களுடன் இருப்பார்” என்று கூறினார்.

இந்திய அணியின் பேட்டிங் போதும் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் ராயுடு விரைவாக ஆட்டமிழந்தபோது, களத்துக்கு வந்த விஜய் சங்கர் கேப்டன் கோலிக்கு துணையாக சிறப்பாக விளையாடினார். விரைவாக ரன்களை சேகரித்த அவர் 46 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதால் உலகக் கோப்பை அணியில் நிச்சயம் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெறுவார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஹர்திக் பாண்ட்யாவும், விஜய் சங்கரும் ஆடும் லெவனில் இடம்பெற்றால் நிச்சயம் இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர்களும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close