[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

வித்தியாசமாக விக்கெட் வீழ்த்திய ஆஸி.வீராங்கனை: வைரலாகும் வீடியோ!

australia-women-s-cricketer-completes-one-of-the-most-bizarre-dismissals-ever

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை வித்தியாசமாக விக்கெட் வீழ்த்திய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் லெவன் அணியும் நியூசிலாந்து மகளிர் அணியும் மோதிய ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 45 வது ஓவரை வீசினார், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹீதர் கிரஹாம். பந்தை எதிர்கொண்டார், பெர்கின்ஸ். எதிர்முனையில் கேத்தே மார்டின் நின்றுகொண்டிருந்தார்.

கிரஹாம் பந்தை வீச, அடித்தார் பெர்கின்ஸ். அந்த பந்து நேராக எதிர்முனையில் நின்ற மார்டினின் பேட்டில் பட்டு உயரே பறந்தது. அதை லாவக மாக பிடித்த கிராஹம், அவுட் என்று கத்தினார். என்ன நடந்தது என்று தெரியாமல் கேத்தே மார்டினும் பெர்கின்ஸும் ஆச்சரியத்தில் நிற்க, அவுட் கொடுத்தார் நடுவர்.

இந்த வித்தியாச அவுட் வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைர லாகி வருகிறது. 

 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close