[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
  • BREAKING-NEWS தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது 'விர்ச்சுவல் சிம் கார்டு'-தீவிரமடையும் விசாரணை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

முதல் டி20 போட்டி : இந்தியா போராடித் தோல்வி

indvsaus-1st-t20-india-won-the-match

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மா 5 (8) ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். ஆனால் மற்றொரு வீரரான ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் கோலி 24 (17) ரன்களின் விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதிவரை விளையாடிய தோனி 37 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே குவித்தார். ஆஸ்திரேலிய அணியில் நாதன் கட்லர் நைல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு வந்த மேக்ஸ்வெல் அதிரடியை வெளிப்படுத்தி ஆட்டத்தை மாற்றினார். 43 பந்துகளில் அவர் 56 ரன்களை எடுத்து அவுட் ஆகினார். தொடக்க ஆட்டக்காரரான ஆர்ஸி ஷார்ட் 37 (37) ரன்கள் எடுத்தார். கடைசி மூன்று ஓவர்களில் ஆட்டம் த்ரில் ஆனது. இறுதியில் இரண்டு ஓவர்களுக்கு 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு ஆஸ்திரேலிய வந்தது. அப்போது பந்துவீசிய பும்ரா, அபார திறமையை வெளிப்படுத்தினார். 2 ரன்களை மட்டுமே கொடுத்து முக்கிய விக்கெட்டான, பீட்டர் அண்ட்ஸ்கோம்ப் விக்கெட்டை அவர் எடுத்தார். மேலும், அந்த ஓவரின் கடைசி பந்தில் அவர் மற்றொரு விக்கெட்டையும் சாய்த்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது.

பின்னர் கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆஸ்திரேலியா 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் இந்த ஓவரில் ஆஸ்திரேலிய சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியது. கடைசியாக ஒரு பந்துக்கு 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அதில் 2 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா வென்றது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close