[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

டிராவிட்டின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 82 ரன் தேவை

virat-kohli-stands-82-runs-away-from-scripting-history-in-boxing-day-test-against-australia

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி 82 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிப்பார். 

விராட் கோலி 216 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 38 சதம், 48 அரைசதம் உட்பட 10,232 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 சதம், 19 அரைசதம் உட்பட 6508 ரன்கள் எடுத்துள்ளார். 65 டி20 போட்டிகளில் 2167 ரன்கள் எடுத்துள்ளார்.

         

தன்னுடைய அதிரடியான ரன் குவிப்பால் விராட் கோலி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். சச்சின், தோனி உள்ளிட்ட இந்திய வீரர்களின் சாதனைகள் பலவற்றையும் அவர் பின்னுக்கு தள்ளி வருகிறார். அந்த வகையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டியில், விராட் கோலி 82 ரன்கள் அடிக்கும்பட்சத்தில், ஒரு வருடத்தில் வெளிநாட்டு ஆடுகளங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இதற்கு முன்பாக, முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 1137 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்து வருகிறது. டிராவிட் 2002 ஆம் ஆண்டில் இந்த ரன்னை எடுத்தார். 

               

இந்நிலையில். இந்த ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இதுவரை 1056 ரன்கள் எடுத்துள்ளார். டிராவிட்டின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 82 ரன்கள் தேவை. 10 ரன் எடுத்தார் 1065 ரன் எடுத்த மொஹிந்தர் அமர்நாத்தினை தாண்டிவிடுவார். 

ஆஸ்திரேலியா மண்ணில் சச்சினுக்கு அடுத்தபடியாக விராட் கோலியும் 6 சதங்கள் அடித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 3, 34 ரன்கள் மட்டும் அடித்து கோலி சொதப்பி இருந்தார். பின்னர், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 123 ரன்களுடன் சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்சில் 17 ரன் மட்டும் அடித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close