இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த பயிற்சி டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. சொந்த மண் என்பதால் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா போராடுகிறது. இதனை நடந்து முடிந்த டி20 தொடரிலேயே காண முடிந்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்கிறது.
கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் களம் காணுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடிபோது, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தோற்றது. இதனால் தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியை பெறுமா? என்ற கேள்விகள் கிரிக்கெட் உலகில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அப்போது இருந்த ஆஸ்திரேலிய அணி வேறு, தற்போது உள்ள ஆஸ்திரேலிய அணி வேறு.
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாண்டிங், “கோலி ரன்களை எடுக்கலாம். ஆனால் அதை மட்டுமே நான் நம்மவில்லை. எல்லோருமே அவரை போன்று ஆடமாட்டார்கள். கோலி எதிர்த்து போராடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் மைக்கெல் ஜான்சன் அவரை காயப்படுத்தியுள்ளார். சில நேரங்களில் அவரது பந்துவீச்சு உடல்வாகு முறையே சிறப்பாக இருக்கும். நாங்கள் யாரையும் சிறப்பாக விளையாடுங்கள் என வற்புறுத்த வேண்டாம். சொந்த மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்ற பாதையை அவர்களுக்கு ஏற்கனவே நாங்கள் காண்பித்துள்ளோம். ஆஸ்திரேலியாவில் சில வீரர்கள் செய்த கசப்பான செயல்களை நாம் கடந்து செல்ல தான் வேண்டும்” என்று கூறினார்.
உன்னாவ் வன்கொடுமை: குல்தீப் சிங் செங்கார் மீதான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு
வெங்காய விலை உயர்வு: கோடீஸ்வரரான விவசாயி ?
மாணவர்கள் மீது தடியடி : தமிழகத்தில் வெடித்த மாணவர்கள் போராட்டம்...!
'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
“வெளியே இருப்பவர்களுக்கு எப்படி தெரியும்” - ஜடேஜா ரன் அவுட் சர்ச்சை குறித்து கோலி கருத்து
"தோனி.. தோனி என கத்தினாலும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி"- ரிஷப் பன்ட்
“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?
வேலைதேடும் இன்ஜினியரா நீங்கள்? - இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாமே!
கோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு