[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

மிதாலி எனும் சரித்திரம் !

who-is-mithali-raj-and-what-she-done-for-indian-women-s-cricket-team

மிதாலி ராஜ் அண்மையில் கிரிக்கெட் உலகில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் இதுவாகத்தான் இருக்கும். ஆம் அண்மையில்
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அந்தத் தொடரில் மிதாலி ராஜ் சிறப்பாகவே விளையாடினார்.

ஆனால்மிதாலி ஏன் அன்றைய லெவனில் சேர்க்கப்படவில்லை என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் இது குறித்த
விசாரணையை பிசிசிஐ மேற்கொண்டு. இப்போதைய இந்திய அணியின் கேப்டன் ஹர்மண்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலியிடம்
நேரடியாக விசாரணை செய்து விளக்கத்தையும் பெற்றுள்ளனர். இத்தனைக்கும் டி20 போட்டியில், அதிக ரன் குவித்த இந்தியர்கள் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடம் பிடித்து சாதனையும் படைத்துள்ளார்.

இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, விராத் கோலி, தோனி ஆகியோரைவிட 2,283 ரன்களை குவித்து முன்னணியில் இருக்கிறார் மிதாலி ராஜ். அப்படிப்பட்ட ஒரு சாதனைப் பெண்ணை டி20 கோப்பையின் அரையிறுதியில் அணியில் சேர்காததுதான் பிரச்சனைக்கு காரணம். உலகளவில் ஆண்கள் கிரிக்கெட் அளவுக்கு பெண்கள் கிரிக்கெட் போட்டிகளை பெரிதாய் யாரும் மதிப்பதில்லை என்ற பேச்சு இருக்கிறது. ஆனால் இந்த சர்சைக்கு பின்பு மிதாலி ராஜ் யார் என்றும் அவர் சாதனைகள் என்ன என்பதையும் பலர் தேட தொடங்கியுள்ளனர்.

தமிழ்ப் பெண் மிதாலி 

மிதாலி ராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில். வளர்ந்து, குடியேறியது ஐதராபாத்தில். ஆனால் அவரது தாய்மொழி
தமிழ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவரது பெற்றோர் பெயர் துரைராஜ் - லீலா. இந்திய மகளிர் அணியில் மிதாலி ராஜின்
வருகைக்கு பின்புதான் புதிய வேகம் பெற்றது என கூறலாம். ஏறக்குறைய கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வரும் மிதாலி
ராஜ் இந்திய மகளிர் அணியின் பல முக்கிய வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். உலகளவில் 6 ஆயிரம் ரன்களை
கடந்த வீராங்கனை பட்டியலில் மிதாலியும் இடம் பிடித்து இருக்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட்டை மிதாலியின் வருகைக்கு முன்பும் பின்பும் என பிரித்துவிடலாம்.

இதுவரை 183 ஒருநாள் கிரிக்கெட் பந்தயத்தில் ஆறு சதங்கள், 49 அரை சதங்கள், 47 பந்தயங்களில் ஆட்டமிழக்காதது என்பது
மட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் சதமடித்த ஐந்து வீராங்கனைகளில் ஒருவர் என்கிற பெருமைக்கும்
உரியவர் மிதாலி ராஜ். 1999 ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு 16 வயதில் அறிமுகமானார் மிதாலி ராஜ். அப்போது
இந்திய அணியில் மட்டுமல்லாமல் உலகளவில் புகழ்பெற்ற வீராங்கனையாக இருந்தவர்கள் அஞ்சும் சோப்ராவும், நீது டேவிடும்.
ஆனால் அவர்களாலும், இந்திய மகளிர் அணியை மிகப்பெரிய வெற்றிக்களுக்கு கொண்ட செல்ல முடியவில்லை. ஆனால்
மிதாலியின் வருகைக்கு பின்பு நிலைமை தலைக்கீழாக மாறியது.

2006-இல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியை மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பெற்றது. அப்போதுதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை மற்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகளை திரும்பிப் பார்த்தது. இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடையாளமாகிவிட்டார் 35 வயதான மிதாலி என்றால் மாற்றுக் கருத்தில்லை. எப்படி ஆண்களுக்கு கபில்தேவ்வும், கவாஸ்கரும், சச்சினும், தோனியும், கோலியும் வளரும் கிரிக்கெட் தலைமுறையினருக்கு ஒரு
இன்ஸ்பிரேஷனோ அப்படிதான் பெண்களுக்கு மிதாலி ராஜ் ஒரு ஆதர்சன வீராங்கனையாக வளம் வருகிறார், எப்போதும்
இருப்பார் என நம்புவோமாக.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close