[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம் இல்லை: ஆஸி.கிரிக்கெட் வாரியம்

smith-and-warner-to-serve-full-bans-for-ball-tampering-cricket-australia

ஸ்மித், வார்னர் ஆகியோரின் தடையை நீக்கும் எண்ணம் இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. டிவி கேமராவிலும் அது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பேன்கிராஃப்ட் தவறை ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து வார்னர், ஸ்மித்துக்கு தலா ஒரு வருடமும் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்துவிட்டது.

 இதற்கிடையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இங்கிலாந்தில் படு தோல்வி அடைந்த அந்த அணி, அடுத்து பாகிஸ்தான் அணியுடன் நடந்த தொடரிலும் தோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்க அணியுடனும் தோல்வியை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியுடன் நீண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் 3 போட்டி கள் கொண்ட டி20 தொடர் நடக்க இருக்கிறது. இதன் முதல் போட்டி, நாளை நடக்கிறது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. 

இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், ஸ்மித் மற்றும் வார்னரின் தடையை தளர்த்தி அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

 இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் டேவிட் பீவெர் மீண்டும் மறுத்தார். இதையடுத்து ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவர் பதவி விலகினார். துணைத் தலைவராக இருந்த எர்ல் எட்டிங்ஸ் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார். அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சரிவில் இருந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்தது. இதுபற்றிய முடிவை இந்த வாரம் அறிவிக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்கள் மீதான தண்டனையை குறைப்பதற்கும் தடையை நீக்குவதற்கும் வாய்ப் பில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய தலைவர் எட்டிங்ஸ் கூறும்போது, ‘மூன்று வீரர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து பேச்சுவார்த் தை நடந்தது. ஏற்கனவே தங்கள் குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான தடையை இப்போது நீக்கினால் அது அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தைக் கொடுக்கும். அதனால் அவர்களின் தடையை நீக்கும் எண்ணமில்லை’ என்று தெரிவித் துள்ளார். 

ஸ்மித் மற்றும் வார்னருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி வரை தடை இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close