[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

“தோனி இல்லாததை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” - ரோகித் யோசனை

dhoni-will-be-missed-but-rohit-backs-pant-and-karthik

தோனி இல்லாத நிலையில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தங்களது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டி20 அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, இப்போது ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமீப காலமாக அவரது ஃபார்ம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளிலும் அவர் தடுமாறி வருகிறார். டி20 போட்டியிலும் ரன் குவிக்க திணறி வருகிறார்.

    

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விக்கெட் கீப்பிங் வேலையை செய்வார்கள். இதில் அணியில் இடம் பிடிக்க இருவருக்கும் கடும்போட்டி நிலவும் எனத் தெரிகிறது.  

இந்நிலையில், தோனி இல்லாத நிலையில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் தங்களது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டி20 அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

           

இதுகுறித்து ரோகித் கூறுகையில், “தோனி எங்களுக்கு மிகப்பெரிய வீரராக திகழ்ந்து வருகிறார். அவருடைய மிடில் ஆர்டர் அனுபவம் இந்தத் தொடரில் இருக்காது. ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் தங்களுடைய திறமையை நிரூபிக்க இது நல்ல தருணமாக இருக்கும். இந்தத் தொடரில் வாய்ப்பை பயன்படுத்தி அவர்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

            

உலகக் கோப்பை தொடருக்கு செல்லும் குறைவான ஆட்டக்காரர்களை வைத்துக் கொண்டு செல்ல முடியாது. ஒருவருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் மாற்று ஆட்டக்காரர்கள் தேவைப்படுவார்கள். அதனால், ரிஷப், தினேஷ் போன்றோரின் திறனை சோதிக்க இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு போட்டிகள் விளையாடுகிறோம் என்பது முக்கியம்தான். அதேபோல், நம்முடைய திறமை கிடைக்கும் வாய்ப்பில் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். யார் எப்படி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கலாம்” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close