வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது.
இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டி யாரும் எதிர்பாராத வகையில் சமனில் முடிவடைந்தது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்த இரண்டு போட்டியிலும் சதம் அடித்து மிரட்டினார். இந் நிலையில் 3வது ஒரு நாள் போட்டி புனேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் கடந்த இரண்டு போட்டியிலும் வேகப் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதனால் ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக பும்ரா, புவனேஷ்வர், கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம்:
விராத் கோலி, ரோகித் சர்மா, தவான், அம்பத்தி ராயுடு, தோனி, ரிஷாப் பன்ட், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, கலீல் அகமது, சேஹல்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்