[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

மொயின் அலி சுழலில் சிக்கிய இந்திய வீரர்கள் - சதம் அடித்தார் புஜாரா

ishant-departs-after-sweeping-one-to-the-boundary-moeen-ali-picks-his-fifth-wicket

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 246 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்கள் சாய்த்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். 

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. அணியின் ஸ்கோர் 37 ஆக இருந்த போது, பிராட் வேகத்தில் எல்பிடபிள்யூ ஆனார் கே.எல்.ராகுல். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான் 23 ரன்னில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்தது. இதனையடுத்து, புஜாரா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதே நேரத்தில் விக்கெட்கள் விழாமல் பார்த்துக் கொண்டது. இதனால், இந்திய அணி 31 ஓவரில் 100 ரன்களை எட்டியது. 

      

இந்நிலையில் தான் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலி, கர்ரன் பந்துவீச்சில் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், புஜாரா - ரகானே ஜோடி சற்று நேரம் நிலைத்தது. ஆனால், ரகானேவும் 11 ரன்னில் அவுட் ஆனார். ரகானேவுக்கு இந்திய அணியின் சரிவு தொடங்கியது. ரிஷப் பந்த் தொடங்கி முகமது சமி வரை அடுத்தடுத்து 4 விக்கெட்களை மொயின் அலி மின்னல் வேகத்தில் சாய்த்தார். இதனால், 200 ரன்களை எட்டுவதற்கு இந்திய அணி 8 விக்கெட்களை இழந்தது. சற்று நேரம் தாக்குப்பிடித்த இஷாந்த் சர்மா 14 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 210 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணி 73 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. 

                 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 29 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அதேபோல், கடந்த போட்டியில் களக்கிய ஹர்திக் பாண்ட்யா 4 ரன்னில் நடையை கட்டினார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close