[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

ஆஹா, அற்புதம்: விராத் சதத்தை புகழும் கிறிஸ் கெய்ல்!

virat-has-the-ability-to-inspire-the-whole-team-gayle

‘விராத் கோலி இந்திய கிரிக்கெட் அணிக்கு உத்வேகமாக இருக்கிறார்’ என்று வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 80 ரன்னும் பேர்ஸ்டோவ் 70 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந் தாலும், விராத் கோலி, அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 225 பந்துகளில் 149 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இது அவருக்கு சாதனை சதம். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது. இதையடுத்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவிக்காதவர் என்ற விமர்சனத்தை உடைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் அவரது ஆக்ரோஷ ஆட்டம் இங்கிலாந்து வீரர்களை கூட கைதட்ட வைத்தது. அவர் போராட்டக்குணத்துடன் ஆடிய விதம் கண்டும் அபார சதம் அடித்தது பற்றியும் பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லும் விராத் கோலியை பாராட்டியுள்ளார். கடந்த வருட ஐபிஎல் வரை விராத்தின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியவர் கெய்ல். இந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளை யாடினார். நிகழ்ச்சி ஒன்றுக்காக டெல்லி வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, விராத் கோலியின் பேட்டிங்கை புகழ்ந்தார். 

அவர் கூறும்போது, ‘விராத் கோலியின் பேட்டிங்கை முழுவதுமாக பார்க்கவில்லை. ஆனால், அவரின் பேட்டிங் ஹைலைட்ஸ் பார்த்தேன். அது, அற்புதமான சதம். இந்திய வீரர்கள் நம்பிக்கை இழந்திருக்கும் போது அவர்களை உத்வேகப்படுத்த, இதுபோன்ற சதம் முக்கியமான ஒன்று. இந்திய அணியின் மொத்த உத்வேகமாக விராத் கோலி இருக்கிறார். அவரது சதம், இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நிச்சயம் உற்சாகம் தருவதாக அமையும். அவர் பயமில்லாமல் ஆடக் கூடிய வீரர். மன ரீதியாகவும் தைரியமான வீரர்’ என்றார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close