[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

அஸ்வின், ஷமி மிரட்டலில் சரிந்தது இங்கிலாந்து!

ashwin-spins-india-to-ascendancy

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங் ஹாமில்  நேற்று தொடங்கியது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி. 

இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு, கே.எல் ராகுல் சேர்க்கப்பட்டார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், ஒரே ஒரு சுழற் பந்து வீச்சாளராக அனுபவ வீரர் அஸ்வின் மட்டும் ஆடும் லெவனில் இடம் பெற்றார். 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்தெடுத்தார். அதன்படி அந்த அணியின் அலைஸ்டர் குக்கும், ஜென்னிங்சும் களமிறங்கினர்.  உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் மாறி மாறி தாக்குதல் தொடுத்தனர்.

தொடக்க ஜோடியை, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார். அவரது பந்து வீச்சில் அலஸ்டயர் குக் (13 ரன்) கிளன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் ஜோ ரூட் இறங்கினார். அவரும், ஜென்னிங்சும் இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டு ரன்களை சேகரித்தனர். இஷாந்த் ஷர்மாவும், முகமது ஷமியும் பந்தில் இங்கிலாந்து வீரர்கள் திணறினாலும் உமேஷ் பந்தில் அடித்து ஆடினர். இதனால் அவர்கள் ரன்வேகம் உயர்ந்தது. 

ஸ்கோர் 98 ரன்களாக உயர்ந்த போது, முகமது ஷமி பந்து வீச்சில் ஜென்னிங்ஸ் (42 ரன்) போல்டு ஆனார். அடுத்து வந்த மலன் (8 ரன்) ஷமியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்ததால் இந்திய வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அடுத்து பேர்ஸ்டோ, ரூட்டுடன் இணைந்து ஸ்கோரை உயர்த்தினார். ரூட் 107 பந்துகளில் தனது 41-வது அரைசதத்தை நிறைவு செய்தார். நன்றாக ஆடிக்கொண்டி ருந்த ரூட் (80) இரண்டாவது ரன்னுக்காக ஓடியபோது அவரை, ரன் அவுட் ஆக்கினார் விராத் கோலி.

பிறகு இங்கிலாந்து வீரர்கள் திணறத் தொடங்கினர். பேர்ஸ்டோ 70 ரன்களிலும் ஜோஸ் பட்லர் ரன் ஏதுமின்றியும், பென் ஸ்டோக்ஸ் 21 ரன்னிலும், ரஷித் 13 ரன்னிலும், பிராட் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆயினர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close