[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

“இந்தியா எங்களை தண்டித்தது” - மனம்திறந்த இங்கிலாந்து கேப்டன்

england-captain-eion-morgan-said-about-3rd-odi-won

ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய அணி தங்களை தண்டித்ததாக இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி லீட்ஸில் உள்ள ஹேட்டிங்க்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 2 (18) ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய ஹிகர் தவான் 44 (49) ரன்கள் சேர்த்தார். கேப்டன் விராட் கோலி 71 (72) ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் வீசிய பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த தோனி 42 (66), தாகூர் 22 (13), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் தலா 21 ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. 

(இதையும் படிங்க : “மற்ற ஸ்பின்னர்களிடம் இல்லாத ஒன்றை குல்தீப்பிடம் பார்த்தேன்” - மிரண்டு போன மார்கன்)

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எளிதில் எட்டியது. அந்த அணியில் ரூட் 100 (120) ரன்கள் எடுத்தார். கேப்டன் இயான் மார்கன் 88 (108) ரன்கள் சேர்த்தார். அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் 27 (27) மற்றும் ஜானி 30 (13) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்னர் வந்த ரூட் மற்றும் மார்கனே நிதானமாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தனர். அவர்களின் நிதானமான ஆட்டம் இந்திய வீரர்களின் பந்துவீச்சை மழுங்கடிக்கச் செய்தது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றி கோப்பையை வென்றது.

இதுதொடர்பாக பேட்டியளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன், “சிறப்பான ஆட்டம். இது எங்கள் பந்துவீச்சாளர்களால் சாத்தியமானது. வுட் மற்றும் வில்லி சிறப்பாக விளையாடினர். நாங்கள் வாய்ப்பு கிடைக்கும் போது அதைப்பயன்படுத்திக் கொண்டோம். இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்திய அணி 300 அல்லது 320 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்தேன். அதை எங்கள் ஸ்பின் பவுலர்கள் கட்டுப்படுத்திவிட்டனர். எங்கள் வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில், இந்திய அணி எங்களை தண்டித்தது. ஆனால் அதன்பின்னர் நாங்கள் இதுவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இதனால் நாங்கள் ஒரு திறமை வாய்ந்த அணியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close