[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

ஜிம்பாப்வே தோல்வி ! இறுதிப் போட்டியில் ஆஸியுடன் பாகிஸ்தான் மோதல் 

pakistan-set-final-date-with-australia

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான். 

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரவு டி20 தொடர் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. ஜூலை 1ம் தேதி தொடங்கி 6ம் வரை லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜூலை 8ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் 2-வது முறையாக மோதியபோட்டி ஹராரே மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

இதில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்கவீரர்களாக சுவாயோ, மிர் ஆகியோர்  களம் இறங்கினார்கள். சுவாயோ 26 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஹாமில்டன் மஸகட்சாவும் 2 ரன்னில் வெளியேறினார். அதன் பின் ஜோடி சேர்ந்த சுவாயோ மற்றும் முசகண்டா பாகிஸ்தான் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. குறிப்பாக அதிரடியாக விளையாடிய சுவாயோ  63 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.  முசகண்டா 33 ரன்களும் எடுத்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகள் இழந்து 162 ரன்களை சேர்த்தது. 

அடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக பகர் சமான் மற்றும் ஹரிஸ் சொஹைல் இருவரும் களம் இறங்கினர். சொஹைல் 16 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஹுசைன் தலாத் மற்றும் பகர் சமான் இருவரும்அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பகர் சமான் 38 பந்தில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹொசைன் தலாத் 44 ரன்களில் வெளியேற கேப்டன் சர்பிராஸ் அஹமது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close