[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

பெருசா எதிர்பார்த்து, சிறுசா சுறுண்ட இந்தியா ! 474-க்கு ஆல் அவுட்

india-all-out-with-474-before-the-end-of-luch-session-on-day-2

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை முன்பு 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் ஆல் ரவுண்டர் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

ஆப்கான் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட சமீபத்தில் தான் ஐசிசி அனுமதி அளித்தது. அதன் பிறகு, தனது முதல் போட்டியில் ஆப்கான் இந்திய அணியுடன் விளையாட முடிவெடுத்தது. அதன்படி பெங்களூரு மைதானத்தில் இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஷிகர் தவான், முரள் விஜய் சதம் அடிக்க முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் உணவு இடைவேளை முன்பு இந்தியா 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட்ததில் ஹர்திக் பாண்டியா 71 ரன்களும், உமேஷ் யாதவ் 19 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர். ஆப்கான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் யமின் அகமத்சய் 3 விக்கெட்டுகளும், வாஃபதார் மற்றும் ரஷீத் கான் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close