[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

விநோத பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்

chennai-super-kings-player-willey-the-villain-s-new-move-at-the-practice-session

2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் தவிர அனைத்து அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு தீவிரமாக விளையாடி வருகின்றன. இதில் கொல்கத்தா நைட் ரைடெர்ஸ் அணி குறிப்படத்தக்க அளவு, முன்னேற்றத்தில் உள்ளது. அந்த அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் உள்ளது. ஐதராபாத் அணி 12 போட்டிகளில், 9 போட்டிகள் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 12 போட்டிகளில், 8 போட்டிகள் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. சென்னையை பொறுத்த வரையில் தொடரை தொடங்கிய போது இருந்த வீரர்கள் அனைவரும் தற்போது அணியில் விளையாடவில்லை. கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி, மும்பை இந்தியன் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை அணியில் ஹர்பஜன் சிங், ஷென் வாட்சன், ப்ராவோ, தோனி, சுரேஷ் ரெய்னா, ரவிந்தர ஜடேஜா, கேதார் ஜாதவ், அம்பதி ராயுடு, இம்ரான் தகிர், தீபக் சஹார், மார்க் உட் ஆகியோர் விளையாடினர். இந்த அணியில் பல வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் கேதர் ஜாதவிற்கு பதிலாக அணியில் தற்போது விளையாடி வருபவர்தான் டேவிட் வில்லி.

இதற்கிடையே சென்னை அணியில் எந்த வீரர் எதைச்செய்தாலும், அது உடனே ட்ரெண்டாகி வந்தது. ஹர்பஜன், ரெய்னா, தோனி என பலரும் பல வித குறும்புகளை வெளிப்படுத்தி வந்தனர். கடந்த போட்டியில் தோனி ஒரு பந்தை ஓடி வந்து எடுத்து, திடீரென ஜடேஜா மீது வீசுவது போல் குறும்பு செய்தார். இதுவும் ட்ரெண்டிங்கில் பட்டையை கிளப்பியது.

அந்த வகையில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னை வீரர்களில் பந்துவீச்சாளர், டேவிட் பில்லி ஒரு பாக்ஸரை போல பயிற்சி செய்கிறார். ஆடிக்கொண்டே கேமராவின் அருகே வரும் அவர், இறுதியில் ஒரு பாக்ஸர் குத்து விட்டு போஸ் கொடுக்குகிறார். இது சென்னை ரசிகர்கள் மத்தியில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. மேலும் விநோத பயிற்சி செய்யும் இவர், பந்துவீச்சாளரா? குத்துச்சண்டை வீரரா? என்றும் மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close