[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

ஜெய்ப்பூரில் ரசிகர்களை கவர்ந்த தோனி மகளின் ரியாக்‌ஷன்!

ms-dhoni-s-daughter-ziva-cheers-for-fans

ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியின் போது, சிஎஸ்கே கேப்டன் தோனியின் மகள் ஜிவா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் எடுத்தார். பின்னர் 177 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கடைசி ஓவரில் திரில்லிங் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜாஸ் பட்லர், 2 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

(சுரேஷ் ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் சிங் மகள் ஹினயா)

இந்தப் போட்டியின் போது சிஎஸ்கே வீரர்கள் சுரேஷ் ரெய்னா மனைவி பிரியங்கா, ஹர்பஜன் சிங் மனைவி கீதா பஸ்ரா, கேப்டன் தோனி மனைவி சாக்‌ஷி ஆகியோர் தங்கள் மகள்களுடன் வந்திருந்தனர். சுரேஷ் ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் சிங் மகள் ஹினயா, தோனி மகள் ஜிவா ஆகியோர் போட்டி நடக்கும்போது ஒவ்வொரு விதமான ரியாக்‌ஷனை தந்துகொண்டிருந்தனர்.

இதில் தோனி மகள் ஜிவாவின் ரியாக்‌ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டி நடக்கும்போது அங்கு வீரர்கள் விளையாட, இங்கு அம்மாவுடன் விளையாடிக்கொண்டிருந்தார் ஜிவா. இதை அடிக்கடி டிவியிலும் காண்பித்துக்கொண்டிருந்தனர்.

ஏற்கனவே இந்த குழந்தைகள் மூவரும் விளையாடிய வீடியோ ஒன்றை சுரேஷ் ரெய்னா வெளியிட்டிருந்தார் என்பதும் அது சமூக வலைத்தளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. 


சிஎஸ்கே தோல்வியும் தோனி மகள் ரியாக்‌ஷனும்- கேலரி

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close