[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

விராட் கோலி பிடித்த சூப்பர் கேட்ச் - அனுஷ்காவின் ஸ்மைல் ரியாக்சன்

watch-virat-kohli-takes-yet-another-stunner-this-time-its-a-game-changing-catch

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பிடித்த கேட்ச் போட்டியின் முடிவையே மாற்றியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கோலி அற்புதமான ஒரு கேட்ச் பிடித்தார். ஆனால், அந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. நேற்றைய போட்டியில் கோலி பிடித்த கேட்ச் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமைந்தது. 

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. எளிதான இலக்கு என்ற போதும், மும்பை வீரர்கள் தொடக்கத்திலே அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 50 ரன்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இக்கட்டான நிலையில் இருந்த அணியை மீட்க தனி ஆளாக ஹர்திக் பாண்டியா போராடினார். மிகவும் நிதானமாக விளையாடிய பாண்டியா அவ்வவ்போது சிக்ஸகளையும் விளாசினார். மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் 41 பந்துகளில் 50 ரன்கள் அடித்த நிலையில் ஹர்திக் பாண்டியா இருந்தார். பாண்டியா களத்தில் இருந்ததால் மும்பை அணி ரசிகர்கள் சற்றே நம்பிக்கையுடன் இருந்தனர். 4 சிக்ஸர்கள் அடித்து மேஜிக் செய்வார் என்று நினைத்தார்கள். 

          

கடைசி ஓவரை சவுத்தி வீசினார். முதல் பந்தை பாண்டியா தூக்கி அடிக்க, அது லாங் ஆன் திசையில் இருந்த கோலியிடம் சென்றது. பந்து சற்றே முன்னே இறங்கிவிட அதை தாவி பல்டி அடித்து கோலி பிடித்தார். கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் பிடித்தது போன்றே இது சூப்பரான கேட்ச் தான். கோலி கேட்ச் பிடித்ததை கேலரியில் இருந்து பார்த்த அவரது மனைவி அனுஷ்கா மகிழ்ச்சியில் திளைத்தார். பாண்டியா ஆட்டமிழந்ததும் மும்பை அணியின் தோல்வி உறுதியானது. பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்த போது, இந்த தொடரில் 5வது இடத்தில் தான் உள்ளது. 

இந்தப்போட்டியை கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா மைதானத்திற்கு வந்து நேரில் கண்டுகளித்தார். கோலி இந்த கேட்சை பிடித்ததும் அனுஷ்காவின் முகத்தில் ஸ்மைலிங் ரியாக்சன். நேற்று அனுஷ்காவுக்கு பிறந்தநாள். கோலியின் வெற்றி அனுஷ்காவின் பிறந்தநாள் பரிசாக அமைந்துவிட்டது. காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த அனுஷ்கா - கோலி கடந்த ஆண்டின் இறுதியில் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகு அனுஷ்காவுக்கு இது முதல் பிறந்தநாள். போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலியும், இந்த வெற்றியை அனுஷ்காவுக்கு பிறந்தநாள் பரிசாக அளிப்பதாக கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close