[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

'ரத கஜ துரக பதாதிகள்' ஹர்பஜன் சிங் சிலிர்ப்பு

harbhajan-singh-tweets-about-cskfans

எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினமே உங்கள் அன்புக்கு நான் அடிமை என ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். காவிரிப் போராட்டம் காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள், புனேவுக்கு மாற்றப்பட்டன. போட்டி வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்ட போதிலும், வீரர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்க ரசிகர்கள் புனே செல்கின்றனர். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் “ பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை". அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ் யா சென்னை ரசிகர்களின்  அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” எனப் பதிவிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ள ஐபிஎல் போட்டியைப் பார்ப்பதற்காக, தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் புனேவுக்கு புறப்பட்டுச் சென்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று காலை புறப்பட்டனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மன்றம் சார்பில் சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த ரயில் மூலம் புனேவுக்கு ரசிகர்கள் செல்கின்றனர். இந்த ரயில் நாளை காலை 5.30 மணிக்கு புனே சென்றடையும்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் புனேவில் நாளை விளையாடவுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close