[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

அசுர வேகத்தில் பறந்த பேருந்து.. அசால்டாக கேரவனில் வந்த வீரர்கள்

kolkata-players-safely-reached-to-hotel

ஆளில்லா பேருந்துக்கு காவல் வாகன பாதுகாப்பு போட்டு கொல்கத்தா அணி வீரர்களை பாதுகாப்பாக போலீசார் ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர்.

காவிரி பிரச்னைக்காக ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரம் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அண்ணாசாலையில் ஆயிரக்கணக்கானோர் கூடி ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஎஸ்கே ஆடையும் எரிக்கப்பட்டது. போராட்டத்தின் போது போலீசார் லேசான தடியடியும் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சுமார் 7 மணியளவில் இந்த  போராட்டம் முடிவுக்கு வந்தது. போக்குவரத்து சீரடைந்ததை அடுத்து மைதானத்திற்கு ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் இருந்து மாலை ஆறு மணி அளவில் சொகுசு பேருந்து ஒன்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் சேப்பாக்கம் மைதானம் வந்தடைந்தனர். இரவு 11.50 மணியளவில் போட்டி முடிந்தவுடன் நள்ளிரவு 12.45 மணிக்கு விக்டோரியா சாலை வழியாக எஸ்காட் போலீசார் பாதுகாப்புடன் அசுர வேகத்தில் புறப்பட்ட கொல்கத்தா அணி வீரர்களின் சொகுசு பேருந்து கடற்கரை சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக சுற்றிச்சென்று அண்ணாசாலை வழியாக எழும்பூரில் உள்ள ரெட்ஸன் ப்ளூ ஹோட்லின் பின்புறம் சென்றது.

வீரர்கள் பாதுக்காப்புடன் ஹோட்டலுக்கு திரும்பிவிட்டனர் என எண்ணிய நிலையில் கனநேரத்தில் 2 கேரவன் வாகனங்கள் ஹோட்டலில் நுழைந்தன. அதில் இருந்து கொல்கத்தா அணி வீரர்கள் இறங்கி ஹோட்டலுக்கு சென்றனர். இது குறித்து பேசிய காவல்துறையினர், ஹோட்டலுக்கு செல்லும் வீரர்களின் பேருந்து மீது கல்வீசித் தாக்கப்படலாம் என்ற தகவலால் போராட்டாக்காரர்களின் கவனத்தை திசை திருப்ப இம்மாதிரியான முயற்சியை கையாண்டதாக தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close