[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் புதிய சாதனை

james-anderson-s-hard-yards-set-new-record

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை படைத்தார்.

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 307 ரன்னும், நியூசிலாந்து அணி 278 ரன்னும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 352 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்த போது ஆட்டம் முடிவுக்கு வந்தது. டிரா ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸில் 17வது ஓவரை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசும்போது புதிய சாதனை படைத்தார். அதாவது டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை வீசிய (30020) வேகப்பந்துவீச்சாளர் என்ற சாத னையை படைத்தார். அவர், இதுவரை 30074 பந்துகளை வீசியுள்ளார். ஆண்டர்சன் 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 531 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸின் கர்ட்னி வால்ஷ் (30,019), டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகள் வீசியவர் என்ற சாத னையை படைத்திருந்தார். அவரை முந்தியிருக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். 

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் முத்தையா முரளிதரன். அவர் 44,039 பந்துகளையும் அனில் கும்ப்ளே 40,850 பந்துகளையும் ஷேன் வார்ன் 40,705 பந்துகளையும் வீசியுள்ளனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close