[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு

கபில்தேவை ஞாபகப்படுத்திய பாண்ட்யா: புகழும் முன்னாள் வீரர்கள்

twitterati-praise-hardik-pandya-s-spirited-performance

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா நேற்று ஆடிய விதம், கபில்தேவ் ஆடியதை ஞாபகப்படுத்தியது என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, கேப் டவுனில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 286 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவருக்கு புவனேஷ்வர்குமார் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்தது. புவனேஷ்வர்குமார் 25 (112) ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த பாண்ட்யா 93(95) ரன்னில் அவுட் ஆனார். 209 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான மார்க்ரம், எல்கர் ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்தார் பாண்ட்யா. இதையடுத்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஹர்பஜன் சிங், ‘சிறந்த நோக்கத்தோடு சரியாக போராடி, ரன்கள் குவித்திருக்கிறார். இந்த இன்னிங்ஸ் நம்பிக்கையை கொடுக்கும். தொடர்ந்து இது போல ஆடுங்கள் பாண்ட்யா’ என்று கூறியுள்ளார். 

விமர்சகர் மோகன்ஸ்தான் மேனன், ‘1992-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆலன் டொனால்ட் பந்துவீச்சை விளாசி 129 ரன்கள் குவித்த கபில்தேவை ஞாபகப்படுத்திவிட்டார் பாண்ட்யா’ என்று கூறியுள்ளார். 

‘இது புத்திசாலித்தனமான இன்னிங்ஸ்’ என்று பாண்ட்யாவை புகழ்ந்திருக்கிறார் சஞ்சய் மஞ்சரேக்கர். கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, ‘சரியாக கணித்து ஆடியிருக்கிறார் பாண்ட்யா. இது புத்திசாலித்தனமான ஆட்டம். ஒரு வீரராக உயர்ந்திருக்கிறார் அவர்’ என்று தெரிவித்துள்ளார். ஆகாஷ் சோப்ரா, முகமது கைப் உட்பட பல முன்னாள் வீரர்களும் ஏராளமான வீரர்களும் அவரை பாராட்டியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close