[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
விளையாட்டு 03 Jan, 2018 12:31 PM

தென் ஆப்ரிக்க அணிக்கு புவனேஷ்வர் குமார் கடும் சவாலாக இருப்பார்: ஸ்ரீநாத் புகழாரம்

bhuvaneshwar-kumar-is-key-for-sa-test

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடும் சவாலாக இருப்பார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்ரிக்கா தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஜவஹல் ஸ்ரீநாத், இந்திய அணி விராத் கோலி தலைமையில் கடந்த ஆண்டு பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளது. இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் கடுமையான தாக்குதலை தொடுப்பார்கள் என நம்பலாம். புவனேஷ்வர் குமார் பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும் என்றார்.

முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டெர்ரி ஆல்டர்னுடன் புவனேஸ்வர் குமாரை ஒப்பிட்டு பேசினார். டெர்ரி ஆல்டன் வேகமாகவும், இலக்கை நோக்கி துல்லியமாக பந்து வீசக்கூடியவர் என்றார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புவனேஷ்வர் குமாரின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். நான் அவரை முழுவதுமாக நம்புகிறேன். அவர் இந்தத்தொடரில் கடுமையான சவால் அளிப்பார். கடந்த சில மாதங்களில் அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அற்புதமானது.
அவர் பல்வேறு வேகங்களில் பந்து வீசக்கூடியவர். அதேபோல் கட்டுப்பாடுடன் பந்து வீசக்கூடியவர். தென் ஆப்ரிக்கா தொடரில் அவர் அணிக்கு பெரிய சொத்தாக இருப்பார். பொதுவாகவே அவரது பந்துகள் சீரான வேகத்தில் நன்றாக பவுன்ஸ் ஆகி செல்லும்.

தென் ஆப்ரிக்கா ஆடுகளங்கள் இந்தியாவை விட முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அங்கு பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும் அவை வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். புவனேஷ்வர் குமார் உட்பட இந்திய வீரர்கள் அங்கு நிலவும் காலநிலைக்கு ஏற்க தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் வெள்ளை நிற பந்துகளுக்கும், சிகப்பு பந்துக்கும் வித்தியாசம் இருக்கும். அதற்கு ஏற்றவாறு பந்துவீச வேண்டும். பந்துவீச்சாளர்கள் அதிகமாக பந்துவீச வேண்டும் அப்போது தான் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். அதேசமயம் அதிகமாக பந்துவீசும் போது காயங்கள் ஏற்படுவது துர்திர்ஷ்டவசமானது. நமது அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களும் இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் எனக் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close