[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

பிரிஸ்பென் ஓபனில் இருந்து நடால் விலகல்: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

nadal-delays-start-to-2018-season

பிரிஸ்பென் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முதல் நிலை வீரர் ரஃபேல் நடால் விலகியுள்ளார்.

ஸ்பெயினை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். காயம் காரணமாக பிரிஸ்பென் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடால், இந்த வருடம் என்னால் பிரிஸ்பேனுக்கு வர இயலாது என அறிவிப்பதற்கு வருந்துகிறேன். என் எண்ணம் விளையாட வேண்டும் என்பதே. ஆனால் கடந்த வருடம் நீண்ட தொடர்களை விளையாடியதால் நான் இன்னும் தயாராகவில்லை.  எனினும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பேன் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அவரது ரசிகர்கள், காயத்திற்காக வருந்துகிறோம், இதற்காக நீங்கள் மன்னிப்பு கோர வேண்டாம். முக்கியமான விஷயம், நீங்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள் என்பதுதான். வேகமாக மற்றும் முழுவதுமாக காயத்தில் இருந்து மீண்டு களத்திற்கு வர வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். உங்களை ஆடுகளத்தில் பார்க்கமுடியாதது கவலையாக இருக்கும். இருப்பினும் உங்கள் ஆரோக்கியம்தான் முக்கியம். நன்றாக ஓய்வெடுங்கள்! உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்! நீங்கள் முழு உத்வேகத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் களமிறங்குங்கள் நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம் என்பன போன்ற உணர்ச்சிகரமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 15-ஆம் தேதி மெல்பர்னில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close