[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

தோனியிடம் நன்றி மறக்காத ரோகித்: சிலிர்த்த ரசிகர்கள்

watch-rohit-sharma-signals-ravi-shastri-for-ms-dhoni-no-3-promotion-twitter-erupts

தோனி கேப்டனாக இருக்கும் போது செய்த நன்றியை ரோகித் சர்மா மறக்காமல் இருப்பது ரசிகர்களை நெகிழவைத்துள்ளது. 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 43 பந்துகளில் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறும் போது, திடீரென தனது கைகளின் மூலம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு சைகை காட்டினார். விக்கெட் கீப்பரை அனுப்புங்கள் என்று கைகளை அவர் பாவனை செய்தார். இதனையடுத்து தோனி 3-வது ஆட்டக்காரராக களமிறங்கினார். இந்தப் போட்டியில் தோனி 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

        

தோனி எந்த இடத்தில் களமிறங்குவது என்பது சமீப காலமாக சர்ச்சையாகி வந்தது. சில நேரங்களில் அவர் 6, 7 இடங்களில் இறங்குவது அவரது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. முதல் டி20 போட்டியில் 4-வது வீரராக தோனி களமிறங்கி 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

தோனி கேப்டனாக இருந்தபோது அவருடைய ஆலோசனையின் பேரில் தான் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அந்த நன்றியை மறக்காத ரோகித், தோனியை 3, 4-வது இடங்களில் இறக்கியுள்ளது எல்லோரையும் நெகிழவைத்துள்ளது. ரோகித் சைகை செய்த வீடியோவை பலரும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close