[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
விளையாட்டு 23 Dec, 2017 09:11 AM

சென்னை சூப்பர் கிங்ஸில் தோனி, ரெய்னா கன்பர்ம்: 3 வது வீரர் அஸ்வினா, ஜடேஜாவா?

super-kings-to-retain-dhoni-raina

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியும் ரெய்னாவும் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. மூன்றாவது வீரராக யாரை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யப்பட்டிருந்தன. இதனால் இந்த இரண்டு அணி, வீரர்களும் வேறு அணியில் இணைந்து ஆடினர். தற்போது தடை நீங்கிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்த ஆண்டு மீண்டும் களமிறங்குகின்றன. 

பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம், அடுத்த ஆண்டு ஜனவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். ஏலத்தில் வீரர்களை எடுக்க ஒவ்வொரு அணியும் ரூ.80 கோடி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், அணியின் கேப்டன் தோனி, அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. மற்றொரு வீரராக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோரில் ஒருவரை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. இரண்டு பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இரண்டு வீரர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரர்கள் என்பதால் அஸ்வினை தக்க வைத்துக்கொண்டு, ஜடேஜாவை ஏலத்தில் எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ, டுபிளிசிஸ், மெக்குல்லம், ஆண்ட்ரு டை ஆகியோரின் ஃபார்ம் கவனிக்கப்பட்டு வருவதாகவும் அதை வைத்தே இவர்களை ஏலத்தில் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர தமிழக வீரர்கள் சிலர் சென்னை அணியில் சேர்க்கப்பட இருக்கிறார்கள். 

யோ மகேஷ், விக்னேஷ், ராகுல் ஷா, சாய் கிஷோர், ஜெகதீசன் ஆகிய தமிழக வீரர்கள் மீது ஐபிஎல் டீமின் கவனத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close